சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டபோதிலும், அதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்தை அணுகவில்லை என அப்பலோ மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஆணையம் முன்பு ஆஜரான அப்போலோ ஐ.சி.யூ. மருத்துவர் செந்தில்குமாரிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜெயலலிதா கண் விழித்ததாகவும், தன் உடல் நிலை குறித்த தகவலை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் என அவர் கூறியதாகவும், செந்தில்குமார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஜெயலலிதா விருப்பப்படிதான் மருத்துவ அறிக்கை கொடுக்கப்பட்டதாகவும், அவர் விருப்பப்பட்டால் சிகிச்சைக்காக வெளிநாடுக்கு கொண்டு செல்ல மருத்துவமனை சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அதுதொடர்பாக நிர்வாகத்தை அணுகவில்லை என அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, வரும் 4ம் தேதி விசாரணை ஆணையம் தரப்பில் செந்தில்குமாரிடம் குறுக்குவிசாரணை செய்யப்படவுள்ளது.
Classic Right sidebar ஜெயலலிதா, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், அப்பலோ மருத்துவமனை, Jayalalithaa Death Case, Arumugaswamy Commission, Apollo Hospital தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NHUBze
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment